என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காவலில் விசாரணை
நீங்கள் தேடியது "காவலில் விசாரணை"
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனை 22-ம் தேதி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. #AshishPandey #DelhiHyattRegency
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.
இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.
ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். #AshishPandey #DelhiHyattRegency

இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.
ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். #AshishPandey #DelhiHyattRegency
×

X